பெங்களூரு: கர்நாடகாவின் வீட்டு வாரிய அமைச்சராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.டி.பி. பிரசாத் நாகராஜு தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த போது, கோஷ்கோடே என்ற பகுதியில் இந்தி படமான "நாகின்" என்ற திரைப்படத்தின் இசை இசைக்கப்பட்டது. அப்பொழுது வாக்கு சேகரிப்பில் இருந்த காங்கிரஸ் எம்.டி.பி. பிரசாத் நாகராஜு "பாம்பு நடனம்" ஆடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகராஜ் தனது ஆதரவாளர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கோஷ்கோடே கிராமத்தில் சென்றார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்களுடன் வந்த இசைக் குழு பிரபலமான "நாகின்" என்ற இந்தி படத்தின் பாடலை இசைத்தது. 


இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட நாகராஜு :பாம்பு நடனம்" ஆடத் தொடங்கினார். இதனையடுத்து அவர்களது ஆதரவாளர்கள் அவரோடு நடனமாடினர். அவர்கள் சுமார் பத்து நிமிடங்கள் நடனமாடினார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.