பெங்களூரு: பரப்பான கட்டத்தை நோக்கி சென்ற கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மஜத - காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2018 மே 12 ஆம் தேதி தேர்தல் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நிலவரப்படி, பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் மற்றும் 2 சுயேச்சைகள் உள்ளனர் 


கர்நாடகத்தில் முதல் அமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணிக்கு சட்டசபையில் 120உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.


கடந்த நாட்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ. என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தையும் அளித்தனர். இதனால் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. அதேவேளையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.-க்களை தங்கள் பக்கம் இழுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கவும், எடியுரப்பா தலைமையிலான ஆட்சி அமைக்கும் பாஜக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், இன்று கர்நாடகா சட்டப்பேரவையில் சபாநாயகர் ரமேஷ், அனைத்து எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துள்ளார்.