கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பு சார்பில் கடந்த ஒரு வாரமாக துப்பாக்கிச்சுடும் பயிற்சி முகாம் நடைபெறுவதாகத் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிசூல முகாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் 120 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த முகாமில் எம்.எல்.ஏ., கே.ஜி. போப்பையா, எம்.எல்.சி அப்பச்சு ரஞ்சன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், சட்ட விரோதமாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


துப்பாக்கி சூடு பயிற்சி குறித்து மடிகேரி நகரசபை கவுன்சிலர் அமீன் மொஹிசீன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இந்து அமைப்பு தொண்டர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பது சட்ட விரோதமானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இந்த வகையான பயிற்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இதை அரசு பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற பயிற்சிகள் மேற்கொள்வதை இந்து அமைப்புகள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 



மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை



இதுகுறித்து இந்து அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நிருபர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கடந்த 20 ஆண்டுகளாக இந்து அமைப்பு தொண்டர்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சிகள் உள்படப் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் தற்காப்பிற்காக மட்டும் தான். மற்றவர்களை போல் தேசத்திற்கு துரோகம் செய்வதற்கு அல்ல. மேலும், இது சட்டவிரோதமாக நடக்கவில்லை. யாரும் இதுகுறித்து பேச தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க | ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR