உசேன் போல்ட்டுடன் ஒப்பிடப்படும் சீனிவாச கவுடா... யார் இந்த நபர்...
பாரம்பரிய எருது பந்தய விளையாட்டான கம்பாலாவில் பங்கேற்ற கர்நாடகாவின் சீனிவாச கவுடா 13.62 வினாடிகளில் 142.5 மீட்டர் தூரம் கடந்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பாரம்பரிய எருது பந்தய விளையாட்டான கம்பாலாவில் பங்கேற்ற கர்நாடகாவின் சீனிவாச கவுடா 13.62 வினாடிகளில் 142.5 மீட்டர் தூரம் கடந்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து கர்நாடகா மக்கள் அவரை முன்னாள் ஜமைக்காவின் ஸ்ப்ரிண்டர் உசேன் போல்ட்டுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 1-ஆம் தேதி கத்ரியில் ஒரு நெல் வயலில் நடைப்பெற்ற கம்பாலா பந்தயத்தின் போது முட்பிட்ரி நகரத்தைச் சேர்ந்த கவுடா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து கவுடா தெரிவிக்கையில்., "மக்கள் என்னை உசைன் போல்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் ஒரு உலக சாம்பியன், நான் ஒரு மெல்லிய நெல் வயலில் மட்டுமே ஓடுகிறேன்" என்று ANI உடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தற்போது மக்கள் சமூக ஊடக பக்கங்களில் கவுடா மற்றும் உசைன்போல்ட் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டு தங்கள் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
கம்பாலா என்பது தென்மேற்கு மாநிலமான கர்நாடகாவில் நடைபெறும் வருடாந்திர எருது ஓட்ட பந்தயமாகும்.
பாரம்பரியமாக, கடற்கரை மாவட்டங்களான தட்சிணா கன்னட மற்றும் உடுப்பியில் உள்ள உள்ளூர் துலுவ நில உரிமையாளர்கள் மற்றும் குடும்பங்கள் இப்போட்டிகளுக்கு நிதியுதவி அளிக்கின்றனர்.
இதனிடையே இந்திய விளையாட்டு ஆணையத்தில் சோதனைகளுக்காக சீனிவாச குவோடாவை அழைப்பேன் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஒரு ட்விட்டில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது., "கர்நாடகாவின் சீனிவாச கவுடாவை உயர் SAI பயிற்சியாளர்களின் சோதனைகளுக்கு அழைக்கிறேன். ஒலிம்பிக்கின் தரங்களைப் பற்றி வெகுஜனங்களில் அறிவு இல்லாதது, குறிப்பாக தடகளத்தில் இறுதி மனித வலிமையும் சகிப்புத்தன்மையும் மிஞ்சும் என நான் உறுதி அளிக்கின்றேன். இந்தியாவில் எந்த திறமையும் சோதிக்கப்படாமல் உள்ளது வேதனையளிக்கிறது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.