முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

INX media முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அவர் நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் பயணம் செய்ய கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரி மனு தாக்கல் இருந்தார். அவரது இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, அப்போது கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தனர். மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை ஏற்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


இதேபோல் கடந்த ஜனவரி மாதமும் பல்வேறு நிபந்தனைகளுடன், கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.