கடந்த 15 நாட்களுக்கும் மேல் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டான். இவனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசார் உள்ளிட்ட 48 பேர் பலியாயினர். மாநிலம் முழுவதும் பல இடங்களில் 2 வாரத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொடர்ந்து இயல்புக்கு திரும்பாமல் பல பகுதிகள் உள்ளன. கூடுதல் துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மேலும் அமைதி ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கை ஆகியன குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீர் செல்கிறார். 2 நாள் அங்கு தங்கும் அமைச்சர் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.