காஷ்மீரில் பள்ளிகள் எரிப்பு- ஐகோர்ட்டு விசாரணை!!
காஷ்மீரில் 25 பள்ளிகள் எரிக்கப்பட்ட விவகாரத்தை ஒட்டி ஐகோர்ட்டு, பள்ளிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தர்விட்டுள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 25 பள்ளிகள் எரிக்கப்பட்ட விவகாரத்தை ஒட்டி ஐகோர்ட்டு, பள்ளிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தர்விட்டுள்ளது.
மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 25 பள்ளிகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் 25 பள்ளிகள் எரித்து, அழிக்கப்பட்டு உள்ளதை அம்மாநில ஐகோர்ட்டு தமாகவே முன்வந்து விசாரித்து.
கல்வி நிலையங்களை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை அவர்களிடம் எடுத்துரையுங்கள் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாநில போலீஸ் மற்றும் கல்வி வாரியத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி நிலையங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் மாநில அரசு அதிகாரிகளை ஐகோர்ட்டு விமர்சித்தது.
பள்ளிகளை பாதுகாக்க இதுவரையில் அவர்களிடம் கொள்கை திட்டம் கிடையாது என்று மாநில அரசை விமர்சித்து உள்ளது. மேலும் பள்ளியை தீ வைத்து எரிப்பவர்கள் அதனை நிறுத்திக் கொள்வார்கள் என்றும் பள்ளிகளை பாதுகாக்க பொதுமக்கள் உதவிசெய்வார்கள் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. நவம்பர் 7-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.