அக்னிபாத் வன்முறைக்கு மத்திய அரசின் `தவறான கொள்கைகள்` தான் காரணம் -கேசிஆர்
அக்னிபாத் போராட்டம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைத்த கும்பல் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய போது இந்த சம்பவம் நடந்தது.
ஹைதராபாத்: அத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறைய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பத்தொன்பது வயது ராகேஷ் நேற்று உயிரிழந்தார். புதிய குறுகிய கால இராணுவ ஆட்சேர்ப்பு அதாவது அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைத்த கும்பல் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்த சம்பவம் நடந்தது மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுக்குறித்து கேசிஆர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வாரங்கலைச் சேர்ந்த ராகேஷ் உயிரிழந்ததற்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அதேசமயம், இறந்தவரின் குடும்பத்துக்கு ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
போராட்டத்தின் போது கொல்லப்பட்ட நபரின் மரணத்திற்கு மத்திய அரசின் "தவறான கொள்கைகள்" காரணம் என்றும், தெலுங்கானா இளைஞர்களை மாநில அரசு பாதுகாக்கும் என்றும் முதல்வர் கே.சி.ஆர். தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: "வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -ராகுல் காந்தி
பாதுகாப்புப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நாட்டின் முக்கிய மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்றாகும்.
முன்னதாக அக்னிபாத் திட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 14 அன்று அறிமுகப்படுத்தினார். அந்த திட்டத்தின் படி, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டு காலத்திற்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், பணிக்காலம் முடிந்ததும் அவர்களில் 25% பேர் வழக்கமான சேவைக்காக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 விழுக்காட்டினர் 11-12 இலட்ச ரூபாய் நிதியுதவியோடு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அப்படி வெளியேற்றப்படுபவர்களுக்கு எந்தவித உதவித்தொகையும் கிடைக்காது என்பதால், போராட்டம் வெடித்தது. அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறை காரணமாக பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறையை கருத்தில் கொண்டு, அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 3 ஆண்டுகள் தளர்த்தியும், முதலாவதாக வரும் ஆண்டு சேர்க்கப்படுவோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல் 4 ஆண்டுகளுக்கு பின் வெளியே வரும் அக்னிவீரர்களுக்கு சி.ஏ.பி.எஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர்வதற்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR