கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தளிபரம்பா அருகே சொருக்காலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கான பிரதான சாலையாக அரசு பேருந்து, உணவு, காய்கறி பொருட்கள் ஏற்றி செல்லும் வண்டிகள் நாள் முழுவதும் வந்து சென்றுக்கொண்டிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போதும் வாகன போக்கு வரத்து உள்ள இந்த சாலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன் நூலிழையில் தப்பித்துள்ளான்.


மேலும் படிக்க | சரக்கடித்து சர்க்கஸ் காட்டிய பூனை, விடாமல் சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ


அந்த அற்புதமான நிகழ்வை அப்பகுதியில் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகள் படமெடுத்துள்ளது. அப்பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 



அந்த வீடியோ பதிவில் சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் வேகமாக சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.


அப்போது இடது பக்கத்திலிருந்து வந்த பைக்கில் மோதினார். பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் அதே சமயத்தில் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அந்தச் சிறுவன் நூல் இழையில் தப்பித்தான்.


பேருந்தில் சிக்கிய அவரது மிதிவண்டி சுக்கு நூறானது. அதே நேரத்தில் சிறுவன் சிறு காயங்களோடு உயிர் பிழைத்தது அதிசயகரமான விஷயமாகவே தெரிகிறது. 


மேலும் படிக்க | 'அம்மாடி...இவ்வளவு பெருசா' எலியை பார்த்து மிரண்ட பூனை: வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR