'அம்மாடி...இவ்வளவு பெருசா' எலியை பார்த்து மிரண்ட பூனை: வீடியோ வைரல்

Funny video: பூனையை பார்த்ததும் எலிகள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது வழக்கம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு ஆச்சரியமான காட்சி வெளியாகி உள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2022, 11:15 AM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
'அம்மாடி...இவ்வளவு பெருசா' எலியை பார்த்து மிரண்ட பூனை: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பூனை எலியை வேட்டையாடுவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். பூனையைப் பார்த்ததும் எலிகள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது வழக்கம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு ஆச்சரியமான காட்சி வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில், ஒரு பெரிய எலி தெருவில் சென்றுகொண்டிருக்கும்போது, வழியில் இரு பூனை தென்படுகிறது. அந்த பூனை தூங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த வீடியோவில் காணப்படும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எலியைக் கண்டு பூனை பயந்துவிடுகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதில் இருந்து மக்கள் சிரித்து சிரித்து மகிழ்ந்து வருகின்றனர். 

எலியை பார்த்து பயந்த பூனை 

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் பூனை மற்றும் எலியின் வீடியோ-வில், தெருவில் பூனை ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. அப்போது ஒரு பெரிய எலி அதை கடந்து செல்கிறது. எலியைக் கண்டதும் பூனை பயந்து, ஆச்சரியமாக விரித்த கண்களுடன் எலியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. எலியும் பெருமிதத்துடன் பூனையிடம் செல்கிறது. 

மேலும் படிக்க | மானை மடக்கிய மலைப்பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள் 

இந்த வீடியோவைப் பார்த்த, சமூக ஊடக பயனர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து பல வித கமெண்டுகளைய் அள்ளி வீசி வருகிறார்கள். 

பூனையிடம் மாஸ் காட்டிய எலியின் வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post  (@cats_usa_)

எலி மற்றும் பூனையின் வீடியோ வைரலானது

இந்த வீடியோ cats_usa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், "பல ஆண்டுகளுக்குப் பிறகு, டாம் ஜெர்ரியைப் பார்க்கிறேன்." என்று எழுதியுள்ளார். 

மற்றொரு பயனர், "பூனை-யால் கூட இந்த எலியை அச்சுறுத்த முடியாது." என்று எழுதியுள்ளார். 

இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்படட் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News