சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து நாளை கேரள முதலமைச்சர் ஆலோசனை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் வருகிற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.


இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த, நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்அழைப்பு விடுத்துள்ளார்.


உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றமில்லை என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.