கேரளாவில் காதலை ஏற்க மறுக்கும் பெண்கள் மீது தாக்குதல்; மாநில அரசு நடவடிக்கை
கேரளாவில் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது
Attack on women in Kerala: கேரளா, தற்பொழுது, காதலை ஏற்க மறுக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளது.
"கேரளாவில் (Kerala) காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு பெண் காதலை ஏற்க மறுப்பதற்காக கொலை செய்யும் அளவிற்கு செல்வது கண்டிக்கதக்கது ஆகும்.
இக் கொடிய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறமால் இருக்க கடுமையான சட்டங்களை மேற்கொள்ளப்படும் எனவும், துன்புறுத்தப்பட்டு பாதிக்கப்படும் பெண்களின் வழக்குகளில் மென்மையான போக்கினை காவல்துறையினர் கடைபிடிக்ககூடாது எனவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்..
இந்த பிரச்சினை தொடர்பாக தீவிர விழிப்பணர்வு நம் எல்லோருக்கும் தேவை என சட்டப்பேரவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) தெரிவித்துள்ளார்.
ALSO READ | ஓணம் திருநாள், சுதந்திர தினத்தன்று கேரளாவில் முழு ஊரடங்கு இல்லை: கேரள அரசு
மேலும் அவர் விரிவான மோசடி சதி திட்டத்துடன் ஒரு சிலர் இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.இளம் பெண்களை பெற்றோர்கள் வீட்டிற்குள் ஒரு தனி அறையில் இணையத்தை பயன்படுத்த அனுமதிக்காதிர்கள். இந்த செயல்பாடுகளால் இளம்பெண்கள் ஒரு மாய உலகில் தனியாக இருக்கிறார்கள். இது தவிர சைபர் மோசடியில் (CYber Crime) சிக்கியவர்களையும் மீட்க வேண்டும்.போலி முகவர்களின் பயன்பாட்டை கண்காணித்து அதனை கட்டுப்படுத்தும் சட்டநடவடிக்கைகளும் தற்போது உள்ளன. அதில் உள்ள பலவீனங்கள் என்ன என்பது குறித்து ஆராயப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.!
ALSO READ | IT Raid: பழிவாங்கும் நடவடிக்கையை திமுக நிறுத்த வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR