கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோயினால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து ஆச்சுறுத்தும் வகையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களாக குறைந்திருந்த கொரோனா நோய்த்தொற்று (Coronavirus) தற்போது திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆறு நாட்களுக்கு முன் 30 ஆயிரமாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரு தினங்களாக மீண்டும் 42 ஆயிரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம், தமிழ்நாடு (Tamil Nadu), கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகலாயா, ஆந்திரா உள்ளிட்ட பத்து மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும், அங்கே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும் அந்தந்த மாநில அரசுகளுக்கு சமீபத்தில் வலியுறுத்தியிருந்தது.
குறிப்பாக, கேரளாவில் சில நாட்களாக தொற்று எண்ணிக்கை 20,000 ஐ தாண்டி வருவதால் அங்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்தது.
ALSO READ: கேரளாவில் இருந்து தமிழகம் வர RTPCR சான்றிதழ் கட்டாயம்
இம்மாதம் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஓணம் பண்டிகையும் சேர்ந்து வருவதால் கேரள அரசு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் 22 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்நாட்களில் கேரளாவில் முழு ஊரடங்கு இருக்காது என கேரளா அரசு அம்மக்களுக்கு தெரிவித்துள்ளது.
ஆனால் மக்கள் தொகை ஆயிரம் பேர் இருக்ககூடிய இடங்களில் 10 நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் அங்குள்ள கடைகள் அனைத்துக்கும் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வரப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
கேரளா (Kerala) மக்கள் ஓணம் பண்டிகையை சாதி, மதம், இனம், மொழி கடந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவுடனும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறார்கள்.
கேரள மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களும் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: கேரளாவைத் தொடர்ந்து இந்த தென் மாநிலத்திலும் அதிகரிக்கும் தொற்று: 3 ஆவது அலை ஆரம்பமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR