கொச்சி: கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கரிடம் (Sivasankar), கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) திங்களன்று 10 மணி நேரத்திற்கு மேலாக இரண்டாவது சுற்று விசாரணை நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம், என்.ஐ.ஏ அதிகாரிகள், இந்த தங்க கடத்தல் (Kerala Gold Case) மோசடி வழக்கில், திருவனந்தபுரத்தில் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணையை மேற்கொண்டன. அதைத் தொடர்ந்து அவருக்கு NIA ஏஜென்சி அதிகாரிகள், கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி  விளக்கம்  அளிக்க  வேண்டும்  எனக் கூறியது . முன்னதாக, சுங்க இலாகா அதிகாரிகளும்,  அவரிடம் சுமார்  10 மணி நேரத்திற்கு மேல் விசாரணைக்கு மேற்கொண்டார் என்பது  குறிப்பிடத்தக்கது. 


கேரள தங்கக்கடத்தல் (Kerala gold smuggling case) விவகாரத்தில் தொடர்ந்து  என்.ஐ.ஏ அதிகாரிகள் மாறி மாறி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கரிடம் தொடர்ந்து  மேற்கொண்ட  விசாரணையில், அவர்  கூறிய  பதிலில்  முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும்  அவரை  தொடர்ந்து  என்.ஐ.ஏ அமைப்பு கவனித்து  வருகிறது. 


ALSO READ | NIA: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் கைது


சி.சி.டி.வி காட்சிகள்:
இரண்டாவதாக  குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் நடவடிக்கைகளை கண்காணிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு செயலகத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய, அங்கிருக்கும் சி.சி.டி.வி (CCTV footages) காட்சிகளை என்.ஐ.ஏ கோரியுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் பல முறை சிவசங்கரை அழைத்து  பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


திருவனந்தபுரதிதில் நடைபெற்ற விசாரணையின் போது, IAS அதிகாரி ​​சிவசங்கர், ஸ்வப்னா, சுரேஷ் மற்றும் பி.எஸ். சரித்குமார் ஆகியோரை தெரியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எங்கள் குடும்ப உறவு தான் தவிர அதற்கு மேல் எந்த பழக்கமும் இல்லை. அதேநேரத்தில் தங்கக் கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 


ALSO READ | கேரள தங்கக் கடத்தல்: IAS அதிகாரி M. சிவசங்கர் IT செயலர் பதவியில் இருந்து நீக்கம்


தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான , பி.எஸ். சரித் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் சிவசங்கருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் என்பவரையும் சிவசங்கர் நன்றாகத் தெரியும் என்பதும் விசாரணையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், இதுவரை ஸ்வப்னா, சரித், சந்தீப் உள்ளிட்ட பதினாறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை உங்களுக்கு சொல்லுகிறோம். ஜூலை 5 ம் தேதி, சுமார் பதினைந்து கோடி ரூபாய் மதிப்புள்ள முப்பது கிலோகிராம் தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத் துறை கைபற்றியது.


ALSO READ | கேரளா தங்கக் கடத்தல் வழக்கு; NIA விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது!