பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று வாசித்ததாக ஆளுநர் விளக்கம்!
கேரள அரசின் நோக்கம், முதல்வர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று வாசித்ததாக ஆளுநர் ஆரிப் விளக்கம்!!
கேரள அரசின் நோக்கம், முதல்வர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று வாசித்ததாக ஆளுநர் ஆரிப் விளக்கம்!!
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகத்தை கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆரிப் வாசித்தார். கேரள அரசின் நோக்கம், முதல்வர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று வாசித்ததாக ஆளுநர் ஆரிப் விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சிஏஏ சட்டத்தை கேரளா அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. முதலில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
கேரளாவில் அம்மாநில சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சனம் செய்து இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையும் ஆரிப் கான் விமர்சனம் செய்து இருந்தார். என்னிடம் கேட்காமல் எப்படி வழக்கு தொடுத்தீர்கள். மக்களின் வரிப்பணத்தை நீங்கள் இப்படி செலவு செய்ய கூடாது. உங்களுடைய கொள்கைக்காக மக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வாசகத்தை வாசிக்க மாட்டேன் என, கேரள சட்டப் பேவையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியிருந்தார். மேலும், தம்மிடம் கூறாமல் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர்ந்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுடன் சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆரிப் முகமது கானை, உள்ளே நுழைய விடாமல் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கண்டன பதாகைகளை ஏந்தி, ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து, அவைக் காவலர்கள் உதவியுடன் ஆளுநர் ஆரிப் முகமது கானை, அவருடைய இருக்கைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்து சென்றார். அதன் பிறகு ஆளுநர் உரை தொடங்கியதும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.