கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ருதி நாராயணன் என்ற பெண் பத்திரிகையாளர் பெங்களூருவில் ஆங்கில ஊடகத்தில் பணியாற்றி வந்தார். பெங்களூருவில் வொயிட்ஃபீல்டு கணவர் அனிஷ் கொயடன் உடன் ஸ்ருதி வசித்து வந்தார். கடந்த 22-ம் தேதி ஸ்ருதி தொலைபேசி அழைப்புகளை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் நிஷாந்த் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது ஸ்ருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்கொலைக்கு முன்பாக ஸ்ருதி எழுதிய 3 கடிதங்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அதில் காவல்துறைக்கு ஒரு கடிதமும், அவரது கணவர் அனிஷிற்கு ஒரு கடிதமும்,  அவரது வயதான பெற்றோருக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. கணவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 20 நிமிடங்களுக்கு மேல் உன்னுடைய கொடுமைகளை யாராலும் தாங்கிக்கொள்ள இயலாது - 2-வது திருமணம் செய்து கொண்டால், காது கேளாத, பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்துகொள். அப்போதுதான் நீ பேசுவதையும், செய்வதையும் அப்பெண்ணால் உணர முடியாது என ஸ்ருதி எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | மீண்டும் ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!


ஸ்ருதியின் பெற்றோர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர். அவர்களுக்கு ஸ்ருதி எழுதியுள்ள கடிதம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது. “நான் வாழ்ந்தால், அது உங்களுக்கு தினமும் வருத்தமாக இருக்கும். ஆனால் நான் இறந்தால் அந்த சோகம் உங்களுக்கு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்” என ஸ்ருதி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


ஸ்ருதி தன் குடும்பத்தாரிடம் பேசுவது பிடிக்காததால் அவரது கணவர் அனிஷ் வீட்டில் ரகசிய கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்களைப் பொருத்தி கண்காணித்ததாகவும், தாய்க்கு பணம் அனுப்பினால் அல்லது அவரது தந்தைக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்தால் கூட ஸ்ருதியைக் கொடுமைப்படுத்துவார் எனவும், அவரது சகோதரர் நிஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிஎஃப் கணக்கில் தனது தாய் பெயரை ஸ்ருதி நாமினியாக பதிவு செய்திருந்த நிலையில் அதனை தனது பெயருக்கு மாற்றக்கோரியும் அனிஷ் கொடுமைப்படுத்தியதாக நிஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார். அனிஷ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். கல்வி அறிவு அதிகமுடைய கேரளாவில் பெண்கள் வரதட்சணைக் கொடுமையினாலும், கணவனின் கொடுமையினாலும் மரணிப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணமகள் .. காரணம் என்ன..!!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR