திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணமகள் .. காரணம் என்ன..!!

திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட மணமகள், மாமியார் மற்றும் மணமகனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2020, 05:09 PM IST
  • திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட மணமகள், மாமியார் மற்றும் மணமகனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
  • நிச்சயதார்த்தத்தில் விலையுயர்ந்த கார்கள் மற்றும் பல விதமான பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • லாக்டவுன் காரணமாக திருமண தேதி நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணமகள் .. காரணம் என்ன..!!

இன்றைய நவீன காலத்தில், பெண்கள், பல முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு துறையிலிருந்து, விண்வெளி, தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். ஆனால், இப்போதும் கூட வரதட்சணை பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது.

திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் தனது மணமகனுக்கு எதிராக வரதட்சணை கேட்டதாக குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த மணமகள், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு, வரதட்சணை வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போபாலில் வசிக்கும் பெண்ணிற்கு, மும்பையில் வசிக்கும் டாக்டர் அர்பாஸுடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. நிச்சயதார்த்ததிற்கு பிறகு, வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய் கோரினார் என மணப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால், திருமணத்தை நிறுத்தி விடுவதாகவும், அச்சுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர் கூறுகையில், மாமியார் ஒரு பிளாட் வாங்க ரூ.25 லட்சம் வேண்டும் என கேட்டதாக அந்த பெண் கூறினார்.

நிச்சயதார்த்தத்தில் விலையுயர்ந்த கார்கள் மற்றும் பல விதமான பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  லாக்டவுன் காரணமாக திருமண தேதி நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், மணமகனும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணின் தந்தையிடமிருந்து 25 லட்சம் தேவை என்ற கோரிக்கையை வைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், திருமண உறவை முறித்துக் விடுவதாக அச்சுறுத்தல் விடுத்தனர். அதை அடுத்து, பாதிக்கப்பட்ட மணப்பெண் காவல் நிலையத்திற்கு சென்று, புகார் அளித்துள்ளார். இதன் பின்னர், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ALSO READ | இந்தியாவின் மர்ம ஏரி.. இது வரை இங்கு போனவர்கள் திரும்பியதில்லை..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News