கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரியில், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ.25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. ரூ.25 கோடி முதல் பரிசை வென்றதாக அனூப் அறிவிக்கப்பட்ட போது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எலையே இல்லை. ஆனால், ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் அனூப் தன இவ்வளவு பணம் வென்றதை நினைத்து வருந்துவதாகக் கூறுகிறார். "நான் மன அமைதியை இழந்துவிட்டேன், நான் எனது சொந்த வீட்டிற்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளேன். ஏனென்றால் நான் முதல் பரிசை வென்றதால், தனது பல்வேறு தேவைகளை தீர்த்துக்கொள்ள, பணம் தர வேண்டும் என என்னை பலர் என்னிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். பரிசை வெல்லும் முன் நான் மன அமைதியை அனுபவித்து வந்தேன். ஆனால், இப்போது மன அமைதியை இழந்த நிலையில் நான் தங்கியிருக்கிறேன்," என்று அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனூப் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் பிரதான தலைநகரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீகாரியத்தில் வசிக்கிறார்.லாட்டரி டிக்கெட்டை இங்குள்ள உள்ளூர் ஏஜென்ட் ஒருவரிடமிருந்து அனூப் தனது குழந்தையின் உண்டியலை உடைத்து எடுத்து வாங்கியுள்ளார். 25 கோடி வென்ற அனூப் வரி மற்றும் இதர பாக்கிகள் கழிக்கப்பட்ட பிறகு, பரிசுத் தொகையாக ரூ.15 கோடியைப் பெறுவார்.


"இப்போது நான் இந்த லாட்டரியில் ஏன் வென்றேன் என நினைக்கிறேன். மற்றவர்களை போலவே நானும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் விளம்பரங்கள் கிடைத்ததால், வெற்றி பெறுவதை மிகவும் ரசித்தேன். ஆனால் இப்போது இது ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. எனக்கு இப்போது வெளியே செல்லக்கூட முடியவில்லை. என்னிடமிருந்து உதவி கேட்டு மக்கள் என்னைப் தொல்லை செய்கின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க: பிரதமர் பதவிக்கு பேராசை கொண்டவர் நிதிஷ் குமார் -அமித் ஷா ஆவேசம்


அவர் தனது சமூக ஊடக கணக்கில், இன்னும் பணம் என் கைக்கு வரவில்லை என்று பதிவிட்டுள்ளார். "பணத்தை என்ன செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் இரண்டு வருடங்கள் பணத்தையும் வங்கியில் வைக்கும் எண்ணம் உள்ளது. இப்போது எனக்கு ஏன் இவ்வளவு பரொசு கிடைத்தது என வருந்துகிறேன். இதற்குப் பதிலாக, குறைந்த பரிசுத் தொகையாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்,” என்று அனூப் மேலும் கூறினார்.


தனக்குத் தெரிந்த பலர் எதிரிகளாக மாறும் நிலை இப்போது வந்துவிட்டது என்று அனூப் கூறுகிறார். "என்னைத் தேடி பலர் வருகிறார்கள். முகமூடி அணிந்தாலும், எனக்கு லாட்டரி பரிசு கிடைத்துள்ளது என்று தெரிந்தும் எல்லோரும் என்னைச் சுற்றி வருகிறார்கள். என் மன அமைதி எல்லாம் காணாமல் போய்விட்டது," என்று அனூப் புலம்பினார்.


மேலும் படிக்க: நிதிஷ் ஜி எங்களுடன் கைகோர்த்தது பாஜகவுக்கு முகத்தில் அறைந்தது போல உள்ளது -தேஜஸ்வி யாதவ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ