10:51 | 18-08-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொச்சியில் வெள்ள பாதிப்புக்கான நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸுடன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சுமார் ரூ.500 கோடி நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி. 



09:52 | 18-08-2018


கேரளா மழை வெள்ளம் பாதிப்பு மறு பரிசீலனை ஆலோசனை கூட்டத்தும் பிரதமர் மோடி.... மழை பாதிப்புகள் பற்றி கேரளா முதல்வருடன் மோடி ஆலோசனை..




கேரளா வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார்! 


கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பியதால், அணைகளில் இருந்த மதகுகள் திறக்கப்பட்டு அதிக அளவில் நீர வெளியற்றப்பட்டு வருகிறது. மேலும் கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது. பல நிலச்சரிவுகள் ஏற்ப்பட்டதால் பாதிப்பு அகில அளவில் ஏற்பட்டு உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றனர். 



வெள்ளத்தால் லட்சக்கணக்கான பேர் வீடுகளை இழந்துள்ளனர். பல பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுக்குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன்...100 ஆண்டுகளில் சந்திக்காத வெள்ளத்தை கேரளா எதிர்கொள்கிறது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் உயிர் இழந்துள்ளனர். 2,23,139 பேர் காணவில்லை. சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தாங்க வைக்கபட்டு உள்ளனர். நீங்கள் செய்யும் உதவியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும். கேரளாவுக்கு நிதிஉதவி அளியுங்கள் என தெரிவித்திருந்தார். 



இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளாதாக தகவல் வெளியானதையடுத்து, தற்போது கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து மோடி செல்கிறார்.