வாழ்க்கை நாம் சிறிதும் யோசித்துக்கூடப் பார்க்காத நேரத்தில் நமக்கு பெரிய அளவிலான வேதனைகளை கொடுத்து விடுகிறது. மகிழ்ச்சியைத் தேடிப் போகும் தருணங்களில் மரண வேதனை பதிலாகக் கிடைத்தால் என்ன சொல்வது? அப்படிப்பட்ட ஒன்றை தான் கேரளாவின் ஒரு குடும்பம் இப்போது தாங்கிக்கொண்டிருக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலப்புழா கடற்கரையில் (Alappuzha Beach) காணாமல் போன இரண்டரை வயது சிறுவன் ஆதிகிருஷ்ணாவின் (Adikrishna) உடல் செவ்வாயன்று கண்டுபிடிக்கப்பட்டது.  அந்தச் சிறுவனின் தாயார் அவனுடன் செல்ஃபி (Selfie) எடுத்துக்கொண்டிருந்தபோது, அச்சிறுவனை கடல் அலைகள் அடித்துச் சென்றன.


ஞாயிற்றுக்கிழமை மாலை ஆதிகிருஷ்ணா தனது பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறவினர்களுடன் ஆலப்புழா மாவட்டத்தில் கடற்கரையைப் பார்க்கச் சென்றபோது இந்த சோகமான சம்பவம் நடந்ததாக ஆலப்புழா போலீசார் தெரிவித்தனர்.


ALSO READ: காதலியை பார்க்கச் சென்ற காதலனை அடித்தே கொன்ற உறவினர்கள்!!


ஞாயிற்றுக்கிழமை, மழையைத் தொடர்ந்து, கடலில் அலைகள் சீற்றத்துடன் இருந்தன. இந்தக் காட்சியை அவர்களது குடும்பம் அனுபவித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் அவனைப் பற்றியிருந்தார்.


அவர் ஒரு செல்ஃபியை எடுத்தபோது, ஒரு பெரிய அலை (High Waves) வந்தது. அந்த அலையின் தாக்கத்தில், தாய் கட்டுப்பாட்டை இழந்தார், தாயின் பிடியிலிருந்து குழந்தையின் கை நழுவியது. குழந்தை தண்ணீரில் விழுந்தான். ஆனால், அந்த தாய் விரைவில் தன் கட்டுப்பாட்டை மீட்டு இரண்டு குழந்தைகளை காப்பாற்றினார். ஆனால் அதற்குள் ஆதிகிருஷ்ணா கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டான்.


செவ்வாய்க்கிழமை அதிகாலை, ஆதிகிருஷ்ணாவின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, சிறுவனின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் இறுதி சடங்குகள் பிற்பகலில் நடத்தப்படும்.


ஆதிகிருஷ்ணாவின் பெற்றோர் பாலக்காடு (Palakkad) பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திருமணத்திற்காக திருச்சூரில் (Thrissur) உள்ள ஆதிகிருஷ்ணாவின் தாயின் வீட்டிற்கு வந்திருந்தார்கள், அங்கிருந்து அவர்கள் உறவினரைப் பார்க்க அலப்புழாவுக்குச் சென்றனர். அங்குதான் அவர்களது வாழ்க்கையில் விதி இவ்வாறு விளையாடி விட்டது. 


ALSO READ: காதலியைப் பார்க்க 2,400 Km பயணம் செய்த காதலனுக்கு நடந்த கொடூரம்!