காதலியைப் பார்க்க 2,400 Km பயணம் செய்த காதலனுக்கு நடந்த கொடூரம்!

காதலியைப் பார்க்க 2,400 கி.மீ பயணம் செய்து போன காதலன், வேறு ஒருவருடன் காதலியை பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார்!

Last Updated : Jul 23, 2019, 02:05 PM IST
காதலியைப் பார்க்க 2,400 Km பயணம் செய்த காதலனுக்கு நடந்த கொடூரம்!  title=

காதலியைப் பார்க்க 2,400 கி.மீ பயணம் செய்து போன காதலன், வேறு ஒருவருடன் காதலியை பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார்!

சீனாவை சேர்ந்த டி.ரேடியோசாண்டி என்பவர் தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ஜப்பானில் ஜூலை 19 ஆம் தேதி டி.ரேடியோசாண்டி 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றார். அப்போது வணிக வளாகம் ஒன்றில் இருந்த காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து அவர் முன்பு சென்றார். ஆனால் அவரின் காதலி வேறு ஒருவருடன் இருந்ததால் மனம் வெறுத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கு நடந்த சம்பவங்களை விவரிக்கும் விதமாக சில மாதிரிப் படங்களையும் பதிவிட்டிருந்தார். இது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த ட்விட்டை சுமார் 20,000 பேர் ரீட்விட் செய்துள்ளனர். 80,700 பேர் அந்த ட்வீட்டை லைக் செய்துள்ளனர்.

அந்த ட்விட்டில், ‘தனது காதலிக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக சீனாவிலிருந்து 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றான் அவன். காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து முகத்தை மூடியிருந்தான் அவன். அப்போது, அந்தப் பெண் வேறு ஒருவனுடன் இருந்துள்ளார்’என்று பதிவிட்டுள்ளார்.

 

Trending News