ஏழ்மை என்பது மிக கொடுமையான விஷயம் தான். ஏழ்மை காரணமாக ஒரு தாய் தனது குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்ற, தனது உடல் உறுப்புகளை விற்க முன்வந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவைச் சேந்த 44 வயதான சாந்தி என்ற பெண் , 'குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவை. தாயின் உடல் உறுப்புகள் விற்பனைக்கு (இதயம் உட்பட) விற்பனைக்கு” என்ற பேனரை வைத்து அவர் தனது குடிசையின் முன் அமர்ந்திருந்தார்.


 கேரளாவில் கொச்சியில் வறுமையில் வாடும் ஒரு பெண் வேறு வழியேதும் இல்லாமல் தனது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக தனது அனைத்து உறுப்புகளையும் விற்க முன்வந்துள்ளார்.


குடும்பத்தின் அவரது மூத்த மகன் மட்டுமே வேலை பார்த்து, குடும்ப செலவுகளை கவனித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விபத்தில் சிக்கி, அவருக்கு  மூளை அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்டது. அவர் இன்னும் பூரணமாக குணமாகவில்லை. அவரது இரண்டாவது மகன் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவரது 11 வயது மகள் சாலை விபத்து காரணமாக நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | Bollywood தலைநகரமாகும் உத்திரபிரதேசம்... யோகியின் அதிரடி திட்டம்..!!


இதற்கிடையில், அவரது மூன்றாவது மகன் கோவிட் -19 நெருக்கடி நிலை காரணமாக வேலையை இழந்தார். ஒரு குழந்தை பள்ளியில் படிக்கிறது.


நாங்கள் இங்கு நீண்ட காலமாக ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறோம். எங்களால் வாடகையை  செலுத்த முடியவில்லை. நிலைமை மிகமோசமாக உள்ளது. எனது மூன்று குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலக் கோளாறுகள் இருப்பதால் வேலை செய்ய இயலாது. சுமார் ரூ .20 லட்சம் கடன்களைத் தீர்க்க நாங்கள் கனிவான மனம் கொண்ட மக்களின் உதவியை நாடியுள்ளோம். வேறு வழி ஏதுவ்மே இல்லாத நிலையில் தான் இந்த முடிவிற்கு ச்வந்தேன் என என்று சாந்தி தெரிவித்தார்.


இளைய குழந்தையை கர்ப்பமாக இருந்தபோது தான் கணவனால் கைவிடப்பட்டதாக சாந்தி கூறினார். ஆரம்பத்தில், அவர் ட்ரைவிங் பணி செய்யும் ஆசிரியராக பணிபுரிந்தார், ஆனால் அவரது மகளின் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, அவளை கவனித்துக்கொள்வதற்காக வேலைக்கு செல்வதை நிறுத்தியதாக சாந்தி கூறினார்.


இவரது போராட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து, குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதாக மாநில அரசு உறுதியளித்தது. சுகாதார அமைச்சர் கே கே ஷைலாஜாவும் மருத்துவமனை செலவுகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார்.


மேலும் படிக்க | பள்ளிகள் விரைவில் திறக்கப்படவேண்டும் என்பது பெற்றோர்கள் விருப்பமா; உண்மை நிலை என்ன..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR