பள்ளிகள் விரைவில் திறக்கப்படவேண்டும் என்பது பெற்றோர்கள் விருப்பமா; உண்மை நிலை என்ன..!!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கறிப்பிக்கப்படுகின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 22, 2020, 11:56 AM IST
  • கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கறிப்பிக்கப்படுகின்றன.
  • பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெறாமலேயே மீண்டும் பள்ளிகளை திறக்க தங்கள் கால அட்டவணையை அறிவித்தன.
  • பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோரிடமிருந்து கருத்துக்களை கேட்டறியுமாறு, அனைத்து ஆசிரியர்களையும் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
பள்ளிகள் விரைவில் திறக்கப்படவேண்டும் என்பது பெற்றோர்கள் விருப்பமா; உண்மை நிலை என்ன..!!!

சென்னை (Chennai): 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், சுய விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் வரலாம் அவர்களுக்காக பாடங்களை நடத்தலாம் என்ற அறிவுறுத்தலுடன், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு, வெளியிட்ட பின்னர், சில மாநிலங்கள் பள்ளிகளை திறக்க முடிவு செய்தன.

ஆனால், தமிழகத்தில் (Tamil Nadu), பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஆலோசனைகளைப் பெறாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெறாமலேயே  மீண்டும் பள்ளிகளை திறக்க தங்கள் கால அட்டவணையை அறிவித்தன. 

பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோரிடமிருந்து கருத்துக்களை கேட்டறியுமாறு, அனைத்து ஆசிரியர்களையும் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இதை அடுத்து பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதமா என்பது குறித்து கருத்துக்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சென்னையில் Phone-திருடியவருக்கு பரிசு வழங்கிய போலீஸார்... காரணம் என்ன தெரியுமா..!!!

இந்நிலையில், பள்ளிகள் விரைவில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால், பெற்றோர்களில் பெரும்பாலோர் குழந்தைகளை அனுப்ப தயாராக உள்ளனர் என தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

90 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை விரைவாக மீண்டும் திறக்க வேண்டும் என்று விரும்புவதாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளது.

இருப்பினும், இது தொடர்பாக மாநில அரசு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு எந்தவொரு பள்ளியும் மீண்டும் திறக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த அதிகாரிகள் எச்சரித்தனர்.

எந்தவொரு நிர்வாகமும் அரசின் அனுமதியின்றி பள்ளியை மீண்டும் திறக்க முயன்றால், அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க | கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குவியும் விண்ணப்பம்; எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியது..!!!

More Stories

Trending News