நோயாளிகளின் கிட்னியை திருடி விற்றது தொடர்பாக மும்பையில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் எல்.எச்,ஹிரா நந்தினி மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இங்கு போலி ஆவணங்கள் மூலம் நோயாளிகள் கட்னி திருடப்பட்டு வேறு நபர்களுக்கு பொருத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் விசாரணையை துவக்கினர். இதில், கிட்னி திருட்டில் பலர் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் கூறியிருந்தது.


இந்நிலையில், இந்த சம்பவத்தில் மருத்துவமனையின் சி.இ.ஓ., உள்ளிட்ட 5 டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டாக்டர்கள் சுஜித் சாட்டர்ஜி (சி.இ.ஓ.), அனுராக் நாயக், முகேஷ் ஷேட், முகேஷ் ஷா மற்றும் பிரகாஷ் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கிட்னி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. 


இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகரிப்பு காரணமாக, லட்சகணக்கான இந்தியர்கள் கிட்னி தொடர்பான நோய்களால் அவதிப்படுகின்றனர். இதனால், பலருக்கு கிட்னி கிடைப்பதில்லை. இதனை பயன்படுத்தி, கள்ளசந்தையில் கிட்னி விற்பனை அதிகளவில் நடப்பதாக அதிகரிக்க காரணமாக உள்ளது.