ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் உங்கள் விமானப் பயணம் மேலும் சுலபமாகிறது. ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் புதிய வழித்தடங்கள் பயணத்தை எளிதாக்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகாகோவிலிருந்து ஹைதராபாத்திற்கு non-stop விமானச் சேவை  
AI-108 விமானத்தில் பயணித்த 237 பயணிகளுக்கும் 16 விமானப் பணியாளர்களுக்கும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா (Air India) ஊழியர்கள் வரவேற்பு கொடுத்தனர். கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கேக் வெட்டி பயணிகளை வரவேற்றதாக விமான நிலைய நிர்வாகத்தை கையாளும் ஜி.எம்.ஆர் குழு கூறுகிறது.  


AI 107 Flight Schedule


ஹைதராபாதில் இருந்து மதியம் 12.50 மணிக்கு, 226 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் சிகாகோவுக்கு புறப்பட்டது AI 107 விமானம். விமான முனையத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மற்றும்  ஜி.எம்.ஆர் (GMR)ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Also Read | Airport செல்வதற்கு முன் இந்த முக்கியமான செய்தியைப் படியுங்கள்


AI 108 Flight schedule


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானம் AI-107 பயணம் மேற்கொள்ளும். இது ஹைதராபாத்தில் இருந்து மதியம் 1250 மணிக்கு (ஐஎஸ்டி) புறப்பட்டு அதே நாளில் மாலை 6:30 மணிக்கு சிகாகோவை அடையும் (CST/ உள்ளூர் அமெரிக்க நேரம்). திரும்பும் விமானம் AI-108 வாரந்தோறும் புதன்கிழமை 2130 மணிக்கு (CST / உள்ளூர் அமெரிக்க நேரம்) சிகாகோவிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.40 மணிக்கு (IST) ஹைதராபாத்தை அடைகிறது.


பாக்கியோங்கிற்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் (Spicejet Flight to Pakyong)


மறுபுறம், மலிவான விமான சேவைகளை வழங்கும் ஸ்பைஸ்ஜெட் (Spicejet), டெல்லி மற்றும் சிக்கிமின் பாக்கியோங் Delhi-Pakyong spicejet Flight) விமான நிலையங்களுக்கு இடையே ஜனவரி 23 முதல் தினசரி நேரடி விமானங்களை இயக்கும் என்று கூறியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கொல்கத்தாவிலிருந்து பாக்கியோங்கிற்கு முதல் வணிக விமானத்தை 2018 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.


ALSO READ | டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டம்! 21 ரயில்கள் லேட்!


Spicejet Delhi Leh Flight


Bombardier 400 விமானங்கள் இந்த சேவைக்கு பயன்படும் என்றும் இது அரசாங்கத்தின் பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் (Udaan) கீழ் இயக்கப்படும் என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. ஜனவரி 27 முதல் டெல்லி மற்றும் லே இடையே இரண்டாவது கட்டமாக விமான சேவைகள் தொடங்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஸ்பைஸ்ஜெட் - சிக்கிம் விமானம் (Spicejet Sikkim Flight)


பாக்கியோங் மற்றும் லேவை தேசிய தலைநகருடன் இணைக்கும் புதிய விமானங்களைத் தொடங்கவிருப்பதாக ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகிறார்.    சிக்கிம் இந்தியாவின் மிக அழகான மற்றும் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.   


ALSO READ | லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR