CoWIN: தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை சேர்ப்பது எப்படி..!!
கொரோனா வைரஸ் தடுப்பூசி சான்றிதழ்களில் பாஸ்போர்ட் விவரங்களை சேர்க்க, புதுப்பிக்க அல்லது சரிசெய்ய மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேச பயணிகளுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளிக்கும் செய்தியாக, மத்திய அரசின் கோவின் போர்டலில் இப்போது பயனர்கள் தங்கள் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்களை பாஸ்போர்ட்டுடன் இணைக்கலாம்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி சான்றிதழ்களில் பாஸ்போர்ட் விவரங்களை சேர்க்க, புதுப்பிக்க அல்லது சரி செய்ய மத்திய அரசு (Central Government) வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
உங்கள் பாஸ்போர்ட்டை உங்கள் தடுப்பூசி சான்றிதழுடன் எவ்வாறு இணைப்பது எப்படி என பார்க்கலாம்.
பாஸ்போர்ட்டை உங்கள் தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்கும் செயல்முறை
கோவின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லுங்கள் - www. cowin.gov.in. என்ற தளத்தில் லாக் இன் செய்யவும்.
'Raise an issue' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில், 'Passport' ஆப்ஷனை க்ளிக் செய்து, கீழ் தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் இணைக்க விரும்பும் உங்கள் பெயரி தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பாஸ்போர்ட் எண்ணை உள்ளிடவும்.
விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
இந்த செயல்முறை முடிந்ததும், பயனர் புதிய புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை சில "நொடிகளில்" பெறுவார்.
ALSO READ | கொரோனா மூன்றாம் அலை இரண்டாவது அலை போல தீவிரமாக இருக்காது: ICMR
நீங்கள் பதிவிட்ட விவரங்களில் பொருத்தமின்மை, அல்லது தவறு இருந்தால், அதாவது சான்றிதழில் உள்ள பெயர் பாஸ்போர்ட்டில் உள்ள பெயருடன் பொருந்தவில்லை என்றால், வலைத்தளத்திலும் பெயர் திருத்தம் கோரலாம்.
திருத்தம் செய்வதற்கான வழிமுறை:
கோவின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லுங்கள் - www. cowin.gov.in.
''Raise an issue' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'Correction in certificate' ஆப்ஷனை கிளிக் செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் நபரைத் தேர்ந்தெடுக்கவும்.
திருத்தங்களைச் செய்ய வேண்டிய ஆப்ஷனை கிளிக் செய்து விவரங்களைத் திருத்தவும்.
பின்னர், submit என்பதைக் கிளிக் செய்க.
இருப்பினும், பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட்டு பெயர் மாற்றத்தை கோருவது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் விவரங்களை உள்ளிடும் போது, விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
ALSO READ | டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR