புது தில்லி: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிகழ்வின் நினைவாக,  நினைவு நாணயங்களை (Commemorative Coin) வெளியிடுகிறது. அவை ஒரு சிறப்பு வடிவமைப்பில் உள்ளன. இந்த நாணயங்கள் பொதுவான புழக்கத்திற்கு  வருவதில்லை. இந்த நாணயங்களில் ரூ.75, ரூ.100, ரூ.125, ரூ.150, ரூ.250 நாணயங்கள் அடங்கும். இது தவிரவும், பல வகையான நாணயங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக 1964 ஆம் ஆண்டு முதல் நினைவு நாணயத் தொடர் வெளியிடப்பட்டது.  சிறப்பு நாணயங்களை சேகரிக்க விரும்பும் மக்கள் அவற்றை வாங்கலாம். RBI வெளியிடும் இந்த சிறப்பு நாணயங்களை எப்படி வாங்குவது என்பதை இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.


சிறப்பு சந்தர்ப்பங்களில் வெளியிடப்படும் நினைவு நாணயங்கள்


பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டவை மற்றும் அவை சிறப்பு நிகழ்ச்சிகளில் சிறப்பு சந்தர்ப்பங்களில் வெளியிடப்படுகின்றன. ISKCON நிறுவனர் ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் 125 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதற்கு முன்னரும் கூட இதுபோன்ற நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ALSO READ | Jackpot! இந்த '2' ரூபாய் நாணயம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்..!!


நினைவு நாணயங்களை வாங்கும் முறை


நினைவு நாணயத்தை நீங்கள் எடுக்க விரும்பினால், அதை ஆன்லைனில் வாங்கலாம். செக்யூரிட்டீஸ் பிரிண்டிங் அண்ட் கரன்சி மேனுபேக்ச்சரிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்  (Securities Printing and Currency Manufacturing Corporation of India Limited) இணையதளத்தில் நீங்கள் அதை வாங்கலாம். அந்த வலைதளத்திற்கு சென்று, தேவையான நாணயத்தை தேர்வு செய்து, சாதாரண ஆன்லைன் ஷாப்பிங் போல வாங்கலாம். இந்த வெள்ளி நாணயங்களான, இந்த நினைவு நாணயங்கல், வெவ்வேறு விலைகளில் கிடைக்கும்.


50 பைசா நாணயம் இன்னும் புழக்கத்தில் உள்ளது


50 பைசா நாணயம் குறித்த முழுமையான தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் 50 பைசா, ரூ.1, 2, 5, 10 மற்றும் ரூ.20 நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாணயங்கள் எதுவும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படாது. 50 பைசா நாணயம் புழக்கத்தில் உள்ள நிலையில், அதனை வாங்க மாட்டோம் யாரும் எடுக்க மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR