கொரோனா தடுப்பூசியை பெற பதிவு செய்து கொள்வது எப்படி.. விபரம் உள்ளே..!!
கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்த பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
இந்தியாவில் முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் போது ஏற்படக்கூடிய குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசியின் (Corona Vaccine) பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்த பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
முதல் கட்டமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒரு கோடி பணியாளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியில் புள்ள மாநகராட்சி பணியாளர்கள், மூத்த குடிமக்கள், ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
கொரோனா தடுப்பூசியை பெற பதிவு செய்து கொள்வது எப்படி
CoWIN என்னும் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்
அரசாங்க புகைப்பட அடையாளத்தை பதிவேற்றவும் அல்லது AADHAAR தகவலை உள்ளிடவும். உங்கள் விபரங்களை பயோமெட்ரிக்ஸ், ஓடிபி மூலமும் உறுதிபடுத்தலாம்
பதிவுசெய்ததும், தடுப்பூசி போடுவதற்கான தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்படும்
முன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
கோவின் CoWIN அமைப்பில் தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் பொறுப்பாகும்.
மாவட்ட நிர்வாகம், தடுப்பூசி எங்கு எப்போது வழங்கப்படும் என நேரம் ஒதுக்கி, அதற்கான தகவலை பயனாளிக்கு அளிக்கும்.
தடுப்பூசி கொடுக்கப்படும் இடங்கள்
1. அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள்
2. பள்ளிகள் மற்றும் சமூக கூடங்கள்
3. கடினமான மலை பகுதிகளை தடுப்பூசி வழங்கும் பணியில் மொபைல் குழுக்கள் ஈடுபடும்.
ALSO READ | BIG NEWS: பாரத் பயோடெக்கின் COVAXIN தடுப்பூசிக்கு நிபுணர் குழு ஒப்புதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR