Zero Rupee Note:  இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான நோட்டுகளை அச்சிடுகிறது. அன்றாடத் தேவைக்கான பொருட்கள் முதல் மற்ற அனைத்து விதமனா சேவைகளையும் வசதிகளையும் பெற மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் நாட்டில் பூஜ்ஜிய (₹0) ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? பூஜ்ஜிய ரூபாய் நோட்டின் சுவாரஸ்யமான கதையை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறப்பு பிரச்சாரத்தின் கீழ் அச்சிடப்பட்ட, இந்த பூஜ்ஜிய ரூபாய் நோட்டில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மற்ற ரூபாய் நோட்டுகளைப் போலவே உள்ள நிலையில், பூஜ்ஜிய ரூபாய் நோட்டு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும். இந்த நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இது ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் கீழ் அச்சடிக்கப்பட்டது.


ALSO READ | இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்


ஊழலுக்கு எதிரான ஆயுதமாக ஒரு அமைப்பால் தொடங்கப்பட்டமுயற்சி இது. இந்த முயற்சியை 2007 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் தொண்டு நிறுவனம் (NGO) மேற்கொண்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5வது தூண் என்ற இந்த அரசு சாரா அமைப்பு சுமார் ஐந்து லட்சம் பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை செய்து வந்தது. இந்த நோட்டுகள் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அச்சிடப்பட்டு மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.



ஊழலுக்கு எதிராக பல செய்திகள் இந்த ரூபாய் நோட்டில் எழுதப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிரான வகையில், 'ஊழலுக்கு முற்றுப்புள்ளி', 'யாராவது லஞ்சம் கேட்டால், இந்த நோட்டை கொடுங்கள்', 'ஊழல் வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்' என பல செய்திகள் எழுதப்பட்டுள்ளன. இந்த பூஜ்ஜிய ரூபாய் நோட்டில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படமும் அச்சிடப்பட்டு, அந்த நோட்டின் கீழ் வலதுபுறத்தில் அமைப்பின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி அச்சிடப்பட்டுள்ளது.


லஞ்சம் கேட்டவர்களுக்கு இந்த சிறப்பு நோட்டுகள் வழங்கப்பட்டன. '5வது தூண்' என்ற அமைப்பு, ஜீரோ ரூபாய் நோட்டை தயாரித்து, லஞ்சம் கேட்பவர்களுக்கு கொடுத்து வந்தது. ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் சின்னமாக இந்த நோட்டு இருந்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மையங்களைக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இது பெங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் ராஜஸ்தானின் பாலி ஆகிய இடங்களிலும் மையங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR