புதுடெல்லி: அதிகம் கஷ்டப்படாமல் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு தான். பணம் சம்பாதிப்பது எப்படி என்பது எளிதானது அல்ல, என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் பணக்காரராக குறுக்குவழிகளை கடைபிடிக்கக்கூடாது. இருப்பினும், புத்திசாலித்தனத்துடன், அதிர்ஷ்டமும் சேர்ந்தால், குறைந்த நேரத்தில் நீங்கள் பணக்காரர்களாக ஆகலாம்.
பழைய 10 ரூபாய் (Old Rupee Notes) நோட்டை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. உங்களிடம் இருக்கும் பழைய 10 ரூபாய் (Old Coin) நோட்டில் சில குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் இருக்க வேண்டும். அந்த 10 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் அசோகர் தூண் மற்றும் மறுபுறம் ஒரு படகு இருக்க வேண்டும்.
ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்
இந்த அம்சங்களைக் கொண்ட 10 ரூபாய் நோட்டு முதன்முதலில் 1943 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.டி.தேஷ்முக்கின் கையொப்பம் அதில் இருக்க வேண்டும். அதேபோல, ரூபாய் நோட்டின் இரு முனைகளிலும் 10 rupees என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
இந்த ரூபாய் நோட்டை நீங்கள் விற்பனை செய்வதற்கு coinbazzar.com வெப்சைட்டில் சென்று விற்பனையாளராகப் பதிவுசெய்ய வேண்டும். இந்த அரிய வகை 10 ரூபாய் நோட்டை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே உங்களிடம் அத்தகைய 10 ரூபாய் நோட்டு இருந்தால், அதை இந்த இணையதளத்தில் விற்க தாமதிக்க வேண்டாம்.
ALSO READ | இந்த 5, 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR