நிதியமைச்சரின் Amrit Kaal நனவாகுமா? இல்லை பகல் கனவா?
இந்தியா 75ல் இருந்து 100க்கு செல்வதற்கான `அமிர்த காலத்திற்கான` அடிக்கல் நாட்டப்படும் என பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் குறிப்பிட்டார்....
புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், இந்தியா 75ல் இருந்து 100க்கு செல்வதற்கான 'அமிர்த காலத்திற்கான' அடிக்கல் நாட்டப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் குறிப்பிட்ட 'amrit kaal' என்ற வார்த்தை வேதகால ஜோதிடத்திலிருந்து வந்தது, அங்கு 'அமிர்த கால்' என்பது நல்ல காலத்திற்கான துவக்கமாகும்.
தமிழில் அமிர்தம் என்பதற்கான பொருள், சுபமானதாக கருதப்படுகிறது. ஆக்கப்பூர்வமானது, நேர்மறையானது, என்றும் அழிவில்லாதது, நீங்க நிறைவு கொடுப்பது, இன்பம் என பல்வேறு பொருள்களைக் கொடுக்கிறது.
அதாவது இந்தியாவின் இன்பத்திற்கான காலம் தொடங்கிவிட்டது என்று நிதியமைச்சர் சொல்வதாக பொருள் கொள்ளப்படுவது, இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.
எந்தவொரு புதிய பணியையும் தொடங்க சிறந்த மற்றும் மிகவும் மங்களகரமான காலமாகவும் அமிர்த காலம் கருதப்படுகிறது. அதாவது அதிகாலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடுவார்களே, அந்த சமயத்தை Amrit Kal என்ற வார்த்தை குறிப்பதாகவும் பொருள்படுகிறது.
ALSO READ | Budget 2022: பட்ஜெட்டின் முக்கியமான 40 ஹைலைட் அம்சங்கள்
அதாவது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு நிர்வாகத்தில் இந்தியா இன்பமான வாழ்வை பார்க்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2022, அடுத்த 25 ஆண்டுகாலத்திற்கான முன்னேற்றத்திற்கான இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை அமைக்க முயல்கிறது என்று குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், Amrit Kal என்பதை இன்பமான நேரம் என்றும், பிரம்ம முகூர்த்தமான அதிகாலை நேரம் என்றும் பொருள் கொள்வது பொருத்தமானதாகவே இருக்கிறது.
குறிப்பாக, இந்திய சுதந்திரத்தின் 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில், நாடு உன்னத இடத்தில் இருக்க வேண்டும் என்று அரசு ஆசைப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இதற்கு பாஜகவின் பல பிரமுகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
உள்ளடக்கிய மேம்பாடு, ஆற்றல் மாற்றம், காலநிலை நடவடிக்கை, உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட முக்கிய தூண்களில் கவனம் செலுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
ALSO READ | ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம்!? அவசியம் என்ன?
2022-23ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இந்தியாவின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. இந்த பட்ஜெட்டில் 5 பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில், நாட்டில் நெடுஞ்சாலைகளை 25,000 கிலோமீட்டர்கள் விரிவுபடுத்துவது மற்றும் Nal se Jal scheme (குழாயில் இருந்து தண்ணீர்) திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஐந்து நதி இணைப்பு திட்டங்கள், பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு கூடுதலாக ரூ.48,000 கோடி மற்றும் வடகிழக்கில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துவது ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
ALSO READ | Budget Reaction: பட்ஜெட் மீதான முதல் எதிர்வினைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR