VACCINE CERTIFICATE: இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் தெரியாது!
இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் தெரியாது! பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் தேவையில்லை என்று சொன்னவர்களுக்காகவா இந்த நடவடிக்கை? இல்லை...
புதுடெல்லி: இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் தெரியாது! பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் தேவையில்லை என்று சொன்னவர்களுக்காகவா இந்த நடவடிக்கை? இல்லை...
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களில் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாநிலங்களில் வழங்கப்படும் கோவிட் தடுப்பூசி சான்றிதழில் இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் படம் இருக்காது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.
சுகாதார அமைச்சகம் ஃபில்டர்களை நிறுவும்
தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடியின் படத்தை அகற்ற மத்திய சுகாதார அமைச்சகம் தேவையான ஃபில்டர்கள் கோவின் போர்ட்டலில் (cowin portal) வைக்கும்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.
மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read | 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்
தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசுகள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம்
“தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வருவதால், இந்த 5 மாநிலங்களிலும், மக்களுக்கு வழங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமரின் படத்தை (Prime Minister's photo to the certificate) அகற்ற, கோவின் மேடையில் தேவையான வடிகட்டிகளை சுகாதார அமைச்சகம் நிறுவும்" என்று இது குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது
மார்ச் 2021 இல், சில அரசியல் கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி தேர்தல்களின் போது சுகாதார அமைச்சகம் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!
தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதற்கு எதிரான மனு தொடர்பான வழக்கில், மனுதாக்கல் செய்தவருக்கு 1 லட்சம் அபராதத்தை விதித்த கேரள உயர் நீதிமன்றம், மனுதாரரை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் மட்டும் பிரதமரின் புகைப்படம் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மறைந்துவிடுவது போன்ற தொழில்நுட்ப நுணுக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.
ALSO READ | பிரதமரின் புகைப்படத்துடன் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பது தவறா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR