புதுடெல்லி: பிளாஸ்டிக் தற்போது மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. சந்தையில் இருந்து பொருட்களை கொண்டு வருவது முதல் பேக்கிங் பொருட்கள் வரை மக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜூலை 1, 2022 க்குப் பிறகு, நாட்டில் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் முழுமையான தடை விதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021 ஆம் ஆண்டின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளின் கீழ் (Plastic Waste Management Amendment Rules, 2021), அடுத்த ஆண்டு ஜூலை முதல் தடை செய்யப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இந்த பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது .


ALSO READ | Independence Day: விவசாயிகள் நாட்டின் பெருமையான சின்னமாக மாற வேண்டும் - பிரதமர் மோடி


அடுத்த ஆண்டு ஜூலை முதல் எந்தப் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


1. காது சுத்தம் செய்யும் பட்ஸ்கள் மற்றும் பிளாஸ்டிக் ஸ்டிக்கள்.


2. பலூன்களில் உள்ள பிளாஸ்டிக் குச்சி.


3. பிளாஸ்டிக் கொடிகள்.


4. சாக்லேட் குச்சிகள் மற்றும் ஐஸ்கிரீம் குச்சிகள்.


5. அலங்காரத்திற்கான பாலிஸ்டைனின் (தெர்மோகோல்).


6. தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், கரண்டிகள், கத்திகள் மற்றும் தட்டுகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்கள்.


7. இனிப்பு பெட்டிகள், அழைப்பு அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை சுற்றி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்.


8. 100 மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள்.


பிளாஸ்டிக் கேரி பேக்கின் தடிமன் மாற்றம் இருக்கும்


சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2021 செப்டம்பர் 30ம் தேதி முதல்  பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் தடிமன் வரம்பு 50 மைக்ரான் முதல் 75 மைக்ரான் வரை அதிகரிக்கப்படும்.  டிசம்பர் 31, 2022 முதல் 120 மைக்ரான் வரை அதிகரிக்கும். மக்கும் வகை பிளாஸ்டிக் தடிமன் மீது எந்த வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அதன் விற்பனைக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.


பிரதமர் மோடி (PM Modi) ஜூன் 2018 இல் தனது அரசாங்கம் 2022 க்குள் நாட்டில் அனைத்து வகையான ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR