கொரோனா தொற்று பாதிப்பால உலகமே செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. பலருக்கு வேலை போய்விட்டது. பலர் தொழில்கள் நலிந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரோக்ஷேத்ராவில் (Kurukshetra) தேநீர் விற்று தன் பிழைப்பை நடத்தும் ராஜ்குமாருக்கும் (Rajkumar) அதே நிலைமைதான். கொரோனா தொற்றின் பரவல் காரணமாக அவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. நிலைமையை சரி செய்ய கடன் வாங்கலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆகையால் அவர் ஒரு வங்கியை அணுகி கடனுக்காக விண்ணப்பித்தார்.


கடனுக்கான அவரது விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தது. அது ராஜ்குமாருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், ராஜ்குமாருக்கு அவரது வாழ்க்கையின் மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.


ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!


வங்கியைப் பொறுத்தவரை, அந்த குருக்ஷேத்ரா டீக்காரர் வங்கியிடம் 50 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி அளிக்காத மோசடி நபர்.


தேநீர் விற்று (Tea seller) தனது குடும்பத்தைக் காப்பாற்றும் ராஜ்குமாருக்கு வங்கியில் 50 கோடி கடன் பாக்கியுள்ளது என்ற செய்தியை, அவரால் மட்டும் அல்ல அவரைத் தெரிந்த யாராலும் நம்ப முடியவில்லை. தான் வங்கியில் இப்படி ஒரு கடனை வாங்கவில்லை என ராஜ்குமார் அடித்துக் கூறுகிறார்.  கோவிட் -19 தொற்று பரவியதால் தனது நிதி நிலைமை மோசமாக இருப்பதால், நான் கடனுக்காக விண்ணப்பித்ததாகவும், ஆனால், தனக்கு ஏற்கனவே 50 கோடி ரூபாய் கடன் இருப்பதாகக் கூறி வங்கி தன் விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் ராஜ்குமார் தெரிவித்தார்.



அவரது நிதி நிலைமை சரியாக இல்லாததால், வங்கியில் கடன் வாங்கி புதிய தொழில் ஒன்றை துவக்கலாம் என ராஜ்குமார் யோசித்திருந்தார். இதற்காக வங்கிக்கு சென்ற அவர், வங்கி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தனது ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை அவர்களிடம் காட்டினார். ஆனால் அவர் ஏற்கனவே 50 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக அவரிடம் கூறப்பட்டது.


தான் கடனே வாங்காத போது, தன் பெயரில் வங்கிக் கணக்கில் 50 கோடி ரூபாய் கடன் எப்படி வந்தது என்பது ராஜ்குமாரின் கேள்வி. கடன் வாங்க சென்று கடனாளியாகத் திரும்பிய ராஜ்குமாரைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. கனவிலும் அவ்வளவு பெரிய தொகையைக் காணாதவருக்கு அது ஒரு கடன் சுமையாகவே முன் வந்து நின்றால், அந்த சுமையை அவர் எப்படி சுமக்க முடியும்? வங்கி அதிகாரிகள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!!