ஜூலை, ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி தாக்கலுக்கு கூடுதல் அவகாசம்
ஜிஎஸ்டி இணையதளத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ஜிஎஸ்டி தாக்கலுக்கான கடைசி தேதிகளை ஜிஎஸ்டி அமல்படுத்தும் குழு நீட்டித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கலுக்கான கடைசி தேதிகள் முறையே செப்டம்பர் 10, 25 மற்றும் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஆகஸ்ட் மாதத்திற்க்கு அக்டோபர் 5, 10 மற்றும் 15 என மாற்றப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி இணையதளத்தில் செய்ய ஏராளமானவர்கள் பார்வையிடுவதால் இணையதளத்தின் செயல்பாட்டில் அடிக்கடி சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.