தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதவி விலகல்..
Latest News Sam Pitroda Quits : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பித்ரோடா, தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாக கருத்து கூறியதை அடுத்து அவருக்கு நாட்டு மக்களும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Latest News Sam Pitroda Quits : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், சாம் பித்ரோடா. இவர், தென்னிந்தியர்கள் குறித்து சமீபத்தில் கூறியுள்ள கருத்து, தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பியிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்:
இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரகாவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் விளங்குபவர் சாம் பித்ரோடா. இவர், மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
இவர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, இந்தியா குறித்தும் இந்திய மக்கள் குறித்தும் பேசிய அவர் தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தினை கூறினார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என கூறிய அவர், கிழக்கிந்தியர்கள் சீன மக்கள் போல இருப்பதாகவும், மேற்கிந்தியர்கள் அரபியர்கள் போல இருப்பதாகவும், வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போல இருப்பதாகவும், தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாகவும் கூறினார். யார் எவ்வாறு இருப்பினும், நாம் அனைவரும் சகோதர-சகோதரிகள்தான் என்று அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நாம் அனைவரும் வெவ்வேறு மொழி, வெவ்வேறு மதங்கள் மற்றும் உணவு கலாச்சாரங்களுடம் இருப்பினும் அனைவரும் அனைவரையும் மதிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சி கண்டனம்-பதவி விலகல்
சாம் பித்ரோடாவின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அக்கட்சியின் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து சாம் பித்ரோடா கூறியுள்ள ஒப்புமைகள், ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும், இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரத்தில், சாம் பித்ரோடாவின் ராஜினாமா கடிதத்தை தான் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!
பிரச்சாரமாக மாறும் சாம் பித்ரோடாவின் வார்த்தைகள்..
சாம் பித்ரோடா மேற்குறிப்பிட்டிருந்த நேர்காணலில் பேசுகையில், தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல இருக்கிறார்கள் என்று கூறியது தற்போது பலரை கோபப்படுத்தி இருக்கிறது. இதனால் அவரை பலர் இனவெறி பிடித்தவர் எனக்கூறி வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிக்கைகளையும் வைத்து எதிர் கட்சியினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், சாம் பித்ரோடா இவ்வாறு கூறியுள்ளது அவர்களுக்கு வெள்ளம் சாப்பிடுவது பாேல ஆகிவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களில், வலது சாரி கட்சிகள் இவரது கருத்துகளை தங்களின் பேச்சில் ஹைலைட் செய்து காண்பித்து வருகின்றன. இவர்கள் இப்படி செய்வார்கள் என்று தெரிந்தே, காங்கிரஸ் கட்சி சாம் பித்ரோடாவின் பேச்சுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து விட்டது.
ஒரு சிலர் சாம் பித்ரோடாவை, இந்தியர்களின் ஒற்றுமை குறித்து புரியாதவர் என்றும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை குறித்து உணராமல் இவர் இவ்வாறு பேசி வருவதாகவும் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ