Rahul Ghandhi Lok Sabha Speech : நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றவுடன், அவர் கூறியிருக்கும் கருத்துகள் எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும். அப்படி என்ன நடந்தது? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தியின் பேச்சு..


மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அயோத்தி எம்.பி அவதேஷுக்கு அவையிலேயே கைகுலுக்கி பாராட்டினார் ராகுல் காந்தி.


“அயோத்தி பற்றி பேசத்தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது என்?  ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்”


 "நான் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை”


மக்களவையில் சிவன் படத்தை காட்டி பேசிய ராகுல் காந்தி. சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். “திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல” அகிம்சையின் சின்னம் என்றார். 


பிரதமர் மோடி கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருப்பதாகவும் ராகுல் காந்தி கிண்டலடித்தார். 


பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் எனவும், காந்தியை ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் அவர் கூறுகிறார். இவர் வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் இதை அறிந்திருக்கலாம் என விமர்சனம் செய்தார்.


சிவன் படத்தை காட்ட சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “நான் காண்பிப்பது பதாகை அல்ல ஆவணம்” என ராகுல் காந்தி பதில் கூறினார். 


“அக்னிவீர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல பிரதமர் மோடிதான்” என்றும் கூறினார். 


‘USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் அக்னிபாத் திட்டம் என பேசிய அவர், தொடர்ந்து பிரதமர் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார். 


மேலும் படிக்க | ரயிலில் சாமான்களை பறி கொடுத்தவருக்கு ₹1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!


“நரேந்திர மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்து சமூகம் கிடையாது ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ அல்ல” என்று பேசினார் ராகுல் காந்தி. 


தொடர்ந்து, “உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர்” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். 


பிரதமர் மோடி பதில்..


ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மாேடி, “இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றர்.


கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும். மக்களவையில் இருந்த பாஜக எம்.பிக்கள் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டாலும், மக்கள் பலர் அவரது கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்... சில முக்கிய அம்சங்கள் விபரம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ