இந்திய ரயில்வேயின் மால்வா எக்ஸ்பிரஸில் டெல்லியில் இருந்து இந்தூருக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனது இருக்கையில் பயணித்த பெண்களின் பயணச் சாமான்கள் திருடப்பட்ட ஒரு பெண்ணுக்கு 1.08 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் சாமான்களை பாதுக்காப்பதில் உள்ள "அலட்சியம் மற்றும் சேவைகளில் உள்ள குறைபாடுகளுக்கு" இந்திய ரயில்வே பொறுப்பேற்க வேண்டும் என தனது உத்தரவில் கூறியுள்ளது.
புது தில்லியில் இருந்து இந்தோர் செல்லும் இந்திய ரயில்வேயின் மால்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் மனுதாரர், 2016 ஜனவரி மாதத்தில் பயணம் செய்த போது, ஜான்சி மற்றும் குவாலியர் இடையே மால்வா எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் நுழைந்த விஷமிகள் அவரது லக்கேஜை திருடி சென்றனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பிரகாஷ், இந்த சம்பவம் குறித்து உடனடியாக ரயில் பெட்டியில் உள்ள TTE மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறினார்.
வழக்கை விசாரணை செய்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் இந்தர் ஜீத் சிங் மற்றும் உறுப்பினர் ரஷ்மி பன்சால் அடங்கிய நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் டெல்லியில் வசிக்கும் ஜெய குமாரியின் புகாரை விசாரணை செய்கையில் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பான, வசதியான பயணம் வழங்குவதும், பயணிகளின் உடமைகளின் பாதுகாப்பு வழங்குவதும் ரயில்வேயின் கடமையாகும் என தெரிவித்த நுகர்வோர் தீர்வு ஆணையம், ரூ.1.08,000 நஷ்ட எஈடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
திருட்டு சம்பவம் நடந்த விதம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து புகார்தாரர் அதிகாரிகளிடம் FIR பதிவு செய்ய முயற்சித்த நிலையில், அவர் தனது சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடர அனைத்து வகையான சிரமங்களையும் துன்புறுத்தலையும் அனுபவித்தார் என நுகர்வோர் ஆணையம் கூறியது.
புகார்தாரர் புது தில்லியில் இருந்து ரயிலில் ஏறியதால், இந்த வழக்கை விசாரிக்க ரயில்வேக்கு பிராந்திய அதிகார வரம்பு இருப்பதாக ஆணையம் கூறியது. எதிர் தரப்பின் அலுவலகம் (பொது மேலாளர், இந்திய ரயில்வே) கமிஷனின் அதிகார வரம்பிற்குள் அமைந்துள்ளது என்று ஆணையம் கூறியது.
குமாரி என்ற பயணி தனது உடைமைகள் குறித்து அலட்சியமாக இருந்ததாகவும், லக்கேஜ்கள் பதிவு செய்யப்படவில்லை என்ற ரயில்வேயின் வாதங்களை ஆணையம் நிராகரித்தது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பந்தாடப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் மனுவில் கூறியுள்ளதை நுகர்டவோர் ஆணையம் குறிப்பிட்டது.
ரயில்வே தரப்பு ஊழியர்களின் சேவையில் அலட்சியம் அல்லது குறைபாடுகள் இல்லாமல் இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்காது. எனவே, புகார்தாரர் ரூ. 80,000 நஷ்ட ஈட்டை பெற உரிமை உண்டு" என்று ஆணையம் கூறியது. மன உளைச்சலுக்கு இழப்பீடாக 20,000 ரூபாய் வழங்கியது, இதர செலவிற்காக 8,000 ரூபாய்.