Latest Update Of Ram Temple Inauguration: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயிலின் முதல் நாள் திறப்புவிழாவிற்கான உணவு  பொறுப்பை நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தி வெறும் ஆதாரமற்ற வதந்தி என்றும், அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. அண்மையில் வெளியான 'சலார் பார்ட் 1: சீஸ்ஃபயர்' ('Salaar Part 1: Ceasefire') படத்தின் மூலம் தனது வெற்றி முழக்கத்தை சப்தமாக பதித்த பிரபாஸ், 50 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, இன்று முதல் (ஜனவரி 20 ஆம் தேதி சர்வதேச OTT இயங்குதளமான நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் பிரீமியர் ஷோவாக ரிலீஸ் ஆனது. இதுபோன்ற செய்திகளால், தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்கும் நடிகர் பிரபாஸ், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக செய்திகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


கோவிலின் திறப்பு விழா அன்று நடக்கும் உணவு செலவுகளை பிரபாஸ் பார்த்துக் கொள்ள சம்மதித்துள்ளதாக ஆந்திர எம்எல்ஏ சிர்லா ஜக்கிரெட்டி கூறியதாக வைரலாக செய்தி பரவியது உண்மையல்ல என்று வெளிச்சமாகிவிட்டது. 


மேலும் படிக்க | Ramar Photo: அயோத்தி ராமரின் முதல் புகைப்படம்.. கருவறையில் வைக்கப்பட்ட சிலை - கண்கொள்ளாக் காட்சி


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள திரையுலக நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண், ஜேஆர் என்டிஆர், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரபாஸுக்கு அழைப்பு வந்ததா இல்லையா என்பதும் தெரியவில்லை.


அயோத்தி ராமர் கோவில், ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் பண்டைய நம்பிக்கைகளுடன் நவீன அறிவியல் ஒண்றிணைந்து கட்டப்பட்டுள்ளது. பிரமாண்டமான இந்த ராமர் கோயில், மோசமான நிலநடுக்கங்கள், பெருவெள்ளங்களால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தாங்கக்கூடிய வல்லமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | "நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" ஸ்ரீரங்கத்தில் தடபுடல் வரவேற்பு


டாடா கன்சல்டிங் இஞ்சினியரஸ் லிமிடெட்டும் லார்சன் அண்டு டூப்ரோவும் இணைந்து சிறப்பாகத் திட்டமிட்டு நவீன கட்டடத் தொழில்நுட்பத்தால் கோயில் கட்டப்பட்டுள்ளது. 360 தூண்கள்: கோயில் வடிவமைப்பு நகரா ஸ்டைல் (Nagara style) கட்டடக்கலையைச் சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


ராமர் கோவில் கட்டுமானத்தில், நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை, அதற்கு பதிலாக கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற பொருட்களை விட கருங்கல்லின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் நிலநடுக்கத்தைத் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம் கவனமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.


அதேபோல, ராமநவமி தினத்தன்று கோயில் விக்ரகங்களின் நெற்றியில் சூரிய ஒளி வந்து படும்வகையில் அயோத்தி ராமர் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை 3 நகரங்களில் இதை செய்யக்கூடாது...! அதிரடி உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ