டெல்லி: இன்று திங்கள்கிழமை (நவம்பர் 4) கர்கார்டூமா நீதிமன்றத்தில் (Karkardooma court) பெண் பத்திரிகையாளருடன் (Woman Journalist) தவறாக நடந்து கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை வக்கீல்கள் (Lawyers) அடித்ததால், வழக்கறிஞர்களுக்கும் டெல்லி காவல்துறைக்கும் (Delhi Police) இடையிலான மோதல் மேலும் முற்றியுள்ளது. டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் (Tis Hazari court) வக்கீல்களுக்கும் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வக்கீல்கள் இன்று வேலைநிறுத்த போரட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சனிக்கிழமை நடந்த மோதலில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு வழக்கறிஞர் காயமடைந்தார் மற்றும் 28-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் தில்லி காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடக்கு டெல்லி மாவட்டத்தில் அமைந்துள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சனிக்கிழமை வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இந்த சம்பவம் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்றது. இருவரும் இடையே தொடங்கிய பேச்சு இறுதியில் வன்முறையில் முடிந்தது. இந்த சம்பவத்தால் கோபமடைந்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை வரை டெல்லியின் அனைத்து நீதிமன்றங்களிலும் பணியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.


இந்த சம்பவத்தை அறிந்த டெல்லி உயர் நீதிமன்றம் வன்முறை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் (Delhi High Court) கூடுதல் டி.சி.பி ஹரேந்திர சிங் மற்றும் சிறப்பு (Special Commissioner) சி.பி. சஞ்சய் சிங் ஆகியோரை மாற்றியுள்ளது, 2 ஏ.எஸ்.ஐ.க்கள் (ASI) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


திஸ் ஹசாரி நீதிமன்ற வன்முறை தொடர்பான நீதி விசாரணை வழக்கு 6 வாரங்களில் நடைபெறும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும். காயமடைந்த வழக்கறிஞர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.