உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் ஒன்றில்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச தேர்தலில் 403 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆத் ஆத்மி பெருவாரியான இடங்களைக் கைற்றியுள்ளதால் காங்கிரஸால் 18 இடங்களில் மட்டுமே முன்னிலைப் பெற முடிந்தது. கோவாவில் 12 இடங்களிலும், மணிப்பூரில் 4 இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. உத்தரகாண்டில்  18 இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சொந்த கட்சியை வேறலெவலில் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்... வைரலாகும் ட்வீட்!


அதாவது, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை காங்கிரஸ் வேட்பாளர் புவான் காப்ரி 6 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். பஞ்சாப் தவிர்த்து பாஜக வென்றுள்ள நான்கு மாநில முதலமைச்சர்களில் புஷ்கர் சிங் தாமி மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


அதில், மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்கிறேன் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | விரிசல் விடுகிறதா திமுக கூட்டணி? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்!!


 


தேபோல், கோவாவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், கோவா மக்களின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றார். தங்கள் வேட்பாளர்கள் பல இடையூறுகளை மீறி துணிச்சலுடன் போராடியிருப்பதாகவும், ஒரு சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளுக்கு இடையே காங்கிரசின் வாக்குகள் பிரிந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்த ப.சிதம்பரம், எதிர்பார்த்ததை விட தங்களுக்கு குறைவான வாக்கு எண்ணிக்கையே கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR