ஒடிசா ரயில் விபத்து: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அதன் கிளைம் செயல்முறையை தளர்த்தியுள்ளது என்று LIC தலைவர் சித்தார்த்த மொஹந்தி சனிக்கிழமை தெரிவித்தார். கிளைம் கோருபவர்களின் சோதனைகள் மற்றும் இன்னல்களைக் குறைக்க எல்ஐசி பல சலுகைகளை அறிவித்தது. ஏறக்குறைய 300 பேரின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த மொஹந்தி, எல்ஐசி பாலிசிகள் மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் கிளைம் செய்பவர்களின் கஷ்டங்களைக் குறைக்க பல சலுகைகளை அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உறுதிபூண்டுள்ள எல்.ஐ.சி.


“ஒடிசாவின் பாலசோரில் நடந்த சோகமான ரயில் விபத்தால் இந்தியாவின் எல்ஐசி ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளது. இந்தியாவின் எல்ஐசி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது மற்றும் நிதி நிவாரணம் வழங்க கிளைம் செயல்பாடுகளை விரைவுபடுத்தும்,” என்று மொஹந்தி கூறினார். எல்.ஐ.சி பாலிசிகள் மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா உறுப்பினர்களின் கஷ்டங்களை குறைக்கும் நோக்கத்தில் விதிகள் தளர்த்தப்பட்டு இருப்பதாக தலைவர் கூறினார்.


“பதிவு செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, ரயில்வே அதிகாரிகள், காவல்துறை அல்லது ஏதேனும் மாநில அல்லது மத்திய அரசு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட இறப்புப் பட்டியல் இறப்புச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். கிளைம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், கிளைம் கோருபவர்களுக்கு உதவி வழங்கவும் சிறப்பு உதவி மையம் பிரிவு மற்றும் கிளை அளவில் அமைக்கப்பட்டுள்ளது,” என்று மொஹந்தி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Odisha Train Accident: இருக்கையை மாற்றிக் கொண்டதால் உயிர் தப்பிய தந்தை - மகள்!


பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உதவி மையங்கள்


பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிளைம் தொகை சென்றடைவதையும், கோரிக்கைகள் விரைவாகத் தீர்க்கப்படுவதையும் உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கு, உரிமை கோருபவர்கள் தங்களின் அருகிலுள்ள கிளை, பிரிவு அல்லது வாடிக்கையாளர் மண்டலங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று LIC தெரிவித்துள்ளது. "உரிமை கோருபவர்கள் எங்கள் கால் சென்டரையும் அழைக்கலாம் - 02268276827" என்று அது மேலும் கூறியது.



ஒடிசா ரயில் சோகம்


ஒடிசாவின் பாலசோர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 288 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சென்னை நோக்கிச் சென்ற ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. இது அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயிலுடன் மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பின்பக்க வண்டி மூன்றாவது பாதையில் தடம் புரண்டது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பாதையில் எதிர் திசையில் இருந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.


இரண்டு ரயில்களும் அதிவேகமாக பயணித்து, சுமார் 2,000 பயணிகளை ஏற்றிச் சென்றன. இந்த மோதலில் பதினேழு பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதம் அடைந்து, நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனுக்குள் நுழைய சிக்னல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், லூப் லைனுக்குள் நுழைந்த ரயில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.


முன்னதாக, விபத்து நடந்த சம்பவ இடத்தை பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பார்வையிட்டனர். மேலும், பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தவறுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். 


மேலும் படிக்க | 'ரயில் விபத்துக்கான காரணம் தெரிந்துவிட்டது' - ரயில்வே அமைச்சர் சொன்னது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ