Government of Delhi: டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, "டெல்லி மக்களுக்கு என்னால் ஒரு உத்தரவாதத்தை அளிக்க முடியும். அது சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது" என்றார். இந்த நிகழ்ச்சியின் போது, ​​லெப்டினன்ட் கவர்னரிடம், டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்குமா? எனக் கேட்டதற்கு, இல்லை எனத் திட்டவட்டமாக துணைநிலை ஆளுநர் பதிலளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி துணைநிலை ஆளுநர் Vs டெல்லி முதல்வர்


டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் இந்த கருத்தால், டெல்லி அரசாங்கத்திற்கும் ராஜ்பவனுக்கும் இடையே ஒரு புதிய மோதலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்துக்கொண்டே டெல்லி மக்களுக்காக ஆட்சி நடத்துவார் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. அதைப்போலவே அமலாக்கத் துறை காவலில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கிருந்தபடி உத்தரவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்து வருகிறார்.


நான் ராஜினாமா செய்யப் போவதில்லை -அரவிந்த் கெஜ்ரிவால்


மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார். டெல்லி முதல்வர் மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டு உள்ளார். 'சிறையிலிருந்து ஆட்சி' என்ற திசையில், அவர் நீர் மற்றும் சுகாதாரத் துறைக்கான இரண்டு உத்தரவுகளை வழங்கினார். 


மேலும் படிக்க - சிறையிலிருந்து ஆட்சி, அமைச்சர்களுக்கு உத்தரவு: மிகப்பெரிய பிரச்சாரத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி


டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பாஜக புகார்


இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பாஜக புகார் அளித்துள்ளது மற்றும் அந்த உத்தரவுகள் போலியானது என்று கூறியுள்ளது. மறுபுறம் காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எந்த கோப்பிலும் கையெழுத்திட இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்றும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதற்கு டெல்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் மிக முக்கியமான விஷயம் என்று சில அரசியல் நிபுணர்கள் கூறினர். சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, அரசியல் சாசன வல்லுநர்கள் கூறுகையில், எல்ஜி விரும்பினால், எந்தவொருக் கட்டிடத்தையும் சிறையாக அறிவித்து, அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து, அங்கிருந்து அரசுப் பணிகளைப் பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கலாம். இருப்பினும், எல்ஜி இதை செய்யப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.


சிறையில் இருந்தே ஆட்சி நடந்த டெல்லி மக்கள் ஆதரவு -ஆம் ஆத்மி


முன்னதாக கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில், ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் 'வாக்கெடுப்பு'' நடத்தியது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா அல்லது சிறையில் இருந்து ஆட்சியை நடத்த வேண்டுமா என்று டெல்லி மக்களிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் சிறையில் இருந்தே ஆட்சி நடந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.


மேலும் படிக்க - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த முடியுமா? சட்டம் சொல்வது என்ன?


சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பு சட்டத்தில் அத்தகைய நிலைமை குறித்து தெளிவான விதிகள் இல்லை. கைது செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவதைத் தடுக்கும் எந்தச் சட்டமும் இல்லை. சட்டவிதிகளின்படி, குற்றம் நிரூபிக்கப்படும் முன், எந்த ஒரு அரசியல் தலைவரும் முதல்வர், அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. போன்ற பதவிகளில் நீடிக்கலாம. சிறை அடைந்தபின் பதவி விலக வேண்டும் என சட்டம் இல்லை. சிறையில் இருக்கும்போதும் ஆட்சியை வழி நடத்தக் கூடாது என எங்கையும் இல்லை. சிறையில் இருந்து கொண்டுதான் ஆட்சியை நடத்துங்கள்..


சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது சாத்தியமா?


அமைச்சரவைக் கூட்டங்கள், துறைகளின் செயல்பாடு, கோப்புகளில் கையெழுத்திடுதல் போன்ற பல முக்கியப் பணிகளை முதல்வர் செய்ய வேண்டியிருக்கும். சிறையில் இருந்துக்கொண்டே இவற்றை எல்லாம் செய்வது சாத்தியமில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் கெஜ்ரிவால் சில வேலைகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். சிறையில் இருந்துக்கொண்டு அரசு பணிகளை மேற்கொள்ள சிறை விதிகளில் இடமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவது கெஜ்ரிவாலுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.


மேலும் படிக்க - நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்... மக்களவை தேர்தலில் தாக்கம் இருக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ