ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க இந்தியன் ரயில்வே முன்பதிவு வசதியை கொண்டு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் மாதத்திற்கு ஆறு டிக்கெட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று நடைமுறை இருந்து வந்தது.


தற்போது ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்பதில் மத்திய அரசு அனைத்திற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என்று ரயில்வேத் துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.


ஆன்லைன் முன்பதிவு (ஐஆர்சிடிசி) செய்திருப்பவர் தங்களது ஐ.டி. மூலம் மாதத்திற்கு 6 டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கியிருந்தது. தற்போது ஆதார் எண்ணை ஐ.டி.யுடன் இணைக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆதார் எண் இணைப்பு உறுதி செய்யப்பட்ட ஐ.டி. உள்ளவர்கள் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.