வருமான வரித்தாக்கல் செய்ய பான் - ஆதார் இணைப்பு அவசியம்
வருமான வரித்தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
வருமான வரித்தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கடந்த 2018-19 ஆம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய ஸ்ரேயா சென் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ஆதார் - பான் இணைக்காமல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். இதனையடுத்து மேலும் சிலர் தங்களுக்கும் பான் - ஆதார் இணைப்பில் இருந்து விலக்கு அளித்து வரிதாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று நீதிபதிகள் சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இருப்பினும் வருமான வரித்தாக்கல் சட்ட பிரிவு 139AA.,வின்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என உத்தரவிட்டனர்.