பிரகாசம் மாவட்டம், ஆந்திரா: ஆந்திராவின் (Andhra Pradesh) பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மச்சவரம் கிராமத்திற்கு அருகே இரவு 8 மணியளவில் ஒரு டிராக்டரில் (Tractor) வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியதில், அவர்கள் மீது மின்கம்பி விழுந்ததில் இதுவரை 13 பண்ணை தொழிலாளர்கள் (Farm Workers) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிராக்டரில் (Tractor) சுமார் 30 மிளகாய் வயல் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக நேரடி உயர் அழுத்தக் கம்பி டிராக்டர் மீது விழுந்தது, அதில் ஒன்பது பெண்கள் மற்றும் நான்கு ஆண்களுக்கு மின்சாரம் தாக்கியது மற்றவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன என்றார்.


அருகிலுள்ள ரப்பர்லா கிராமத்திற்கு பண்ணைத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர் சாலையில் உள்ள ஒரு வளைவில் கம்பத்தில் மோதியதாக பிரகாசம் எஸ்.பி. சித்தார்த் கவுசல் தெரிவித்தார்.


அவர்களை அந்த பகுதியில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர், மின்சாரத்தை துண்டித்து விபத்துக்கு உள்ளானவர்களை மீட்டு மற்றொரு டிராக்டரில் ஏற்றி உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சம்ப இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இந்த தகவலை அறிந்த முதலமைச்சர் ஒய் எஸ்.ஜகன் மோகன் ரெட்டி (Y S Jagan Mohan Reddy) அதிருப்தி தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என மாவட்டத்தைச் சேர்ந்த தனது அமைச்சரவை சகாக்களிடம் கேட்டுக் கொண்டார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் நிதியதவி அளிக்க உத்தரவிட்டார்.


ஆந்திரா மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தனும் (Biswa Bhusan Harichandan) தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இறந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.