Live: முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மலையில் விபத்து
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் விபத்துக்குள்ளானது.
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் விபத்துக்குள்ளானது.
Latest Updates
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் இறந்து விட்டதாக, அதிகார் அபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் புறப்படுகிறார்
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் குன்னூர் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோரும் செல்கின்றனர்.
கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர்
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது. ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது. அந்த சாலையில் எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், விமானத்தில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.
சடலங்கள் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட உள்ளதாகவும் தகவல்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கோவைக்கு விரையும் தலைவர்கள்
- இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாலை கோவை வந்தடைகிறார்.
- பிரதமர் மோடி இரவு 10 மணியளவில் கோவை வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே சென்னையிலிருந்து புரப்பட்டு விட்டார். 5 மணிக்கு கோவை வந்தடைவார்,.
- முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்திய அரசின் இராஜிய உயர் மட்ட தலைவர்கள் இன்று இரவு 8 மணிக்குள் கோவை வந்தடைவர் என்று கூறப்படுகின்றது.
நீலகிரிக்கு விரைகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை - சூலூர் இடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் சென்று பின்னர் நீலகிரிக்கு செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் .....
- குன்னூர் விபத்தில் சிக்கிய எம்.ஐ.17வி5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது
- உலக அளவில் பயணத்திற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது
- 13 ஆயிரம் கிலோ எடையை தாங்கிச் செல்லும்.
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார் .
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ சிறப்பு நிபுணர்களின் குழுவை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கோவை சூலூரில் இருந்து கிளம்பிய விமானம், சுமார் அரை மணி நேரத்தில் நண்பகல் 12.20 மணிக்கு நடைபெற்றதாக விபத்துள்ளானதாக கூறப்படுகிறது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.
நீலகிரி மலையில் குன்னூருக்கு அருகே விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியல்:
நீலகிரியில் விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின் படி, இந்த விபத்தில் 4 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் முப்படை தலைமை தளபதி குடும்பத்துடன் பயணித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.