மோடி அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (ஜூலை 07) விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (ஜூலை 07) விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினர்.
Latest Updates
ரவி ஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா
இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடக்கவுள்ள நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பட்டியல் வெளியீடு
மத்திய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்!!
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக பல அமைச்சர்கள் தொடர்ந்து பதவி விலகிவருகின்றனர்.
இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடக்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல். முருகன் பங்கேற்றதால், அவருக்கு அமைச்சரைவில் பதவி அளிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை மத்திய அமைச்சரவையில் இருந்து 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக, பாஜக எம்.பி.க்களுடன் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படுவதை அடுத்து, பல முக்கிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.