கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!!

யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 3, 2024, 02:51 PM IST
  • மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தண்ணீர் இன்றி அல்லாடும் குரங்குகள்
  • குரங்குகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
  • மேட்டுப்பாளையம் முதல் குஞ்சப்பனை வரை உள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை எந்த வித காட்டாறுகளும் கிடையாது.
கடும் கோடையில்... ரோட்டில் சிந்தும் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் குரங்குகள்..!! title=

நாட்டின் பல பகுதிகளில் கடும் கோடை நிலவும் நிலையில், பல்வெறு பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வரும் குரங்குகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படு வருவதோடு, உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் பழ மரங்கள் இல்லை. இதனால், குரங்குகள் வனத்தை விட்டு வெளியேறி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், வனப்பகுதிக்குச் செல்லாமல் சாலையோரங்களில் உணவுக்காகக் காத்திருக்கின்றன. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதி நீல மலையின் அடிவார பகுதி மிக நீண்ட வனப்பரப்பை கொண்ட பகுதியாகவும் உள்ளது. இதில் உள்ள வனப்பகுதியில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகளில் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் யானை, மான் , சிறுத்தை உள்ளிட்ட பெரிய உயிரினங்கள் முதல் குரங்குகள், தேவாங்கு போன்ற சிறிய உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியினை பொறுத்தவரை குன்னூர் சாலையில் பவானி மற்றும் கல்லார் போன்ற இரண்டு ஆறுகள் உள்ள நிலையில் அங்கு சற்று பசுமை மற்றும் நீர்வளம் உள்ளது. ஆனால் கோத்தகிரி சாலையினை பொறுத்தவரை மேட்டுப்பாளையம் முதல் குஞ்சப்பனை வரை உள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை எந்த வித காட்டாறுகளும் கிடையாது. இதனால் இந்த வனப்பகுதியில் வசிக்கும் குரங்கு உள்ளிட்ட சிறு வன உயிரினங்கள் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி... தருமபுரியில் நடந்த சோக சம்பவம்! 

ஏற்கனவே வனப்பகுதி வறட்சியால் கருகி மரங்கள், செடிகளில் உள்ள இலைகள் கூட தரையில் கொட்டி எங்கு பார்த்தாலும் வறட்சியின் முகம் தென்படுகிறது இதனால் இந்த உயிரினங்களுக்கு உணவின்றி தவித்து வரும் நிலையில் தாகம் தீர்க்கும் தண்ணீரும் இன்று சாலைகளில் யாராவது தண்ணீர் தருவார்களா என அல்லாடி வருகிறது. 

சிலர் சாலைகளில் வீசி எறிந்து செல்லும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சிந்தி செல்லும் தண்ணீரினை ரோட்டில் வாய் வைத்து குரங்குகள் தண்ணீருக்கு அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, வனப்பகுதியில் நிலவும் வறட்சி மற்றும் வெப்பக் காற்று காரணமாக வனப்பகுதியில் விலங்குகளுக்குத் தேவையான குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News