உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபாடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் ஞாயிற்றுகிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் தொகுதி என 59 தொகுதிகளுக்கும் நாளை (19 ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் அனிவரும் தற்போது இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். 


இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக அவர் வருவதை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார். நாளை, அவர் பத்ரிநாத் கோயிலுக்கு அவர் செல்கிறார். அங்கு சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.